Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் பொது மயானத்தில் இருந்து கத்தோலிக்க அருட்பணியாளர்களின் சடலங்கள் தோண்டி எடுப்பு

In இலங்கை
Updated: 11:45 GMT, Dec 5, 2017 | Published: 06:05 GMT, Dec 5, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : JudeDanish

மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் நேற்று மாலை, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க சேமக்காலையில் குறித்த சடலங்களை அடக்கம் செய்யும் பொருட்டு இவை தோண்டி எடுக்கப்பட்டுள்ள. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது மயானத்தில் இறந்த பொது மக்கள், மற்றும் கத்தோலிக்க அருட்பணியாளர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்ததுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பொது மயானத்திற்கு அருகில் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக சேமக்காலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கத்தோலிக்க அருட்பணியாளர்களின் சடலங்களை சேமக்காலையில் அடக்கம் செய்வதற்கான அனுமதியினை, ஆயர் இல்லம், மன்னார் நீதவான் நீதிமன்றத்திடம் கேட்டிருந்தது.

குறித்த வழக்கை விசாரனைக்கு உட்படுத்திய மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா அதற்கான அனுதியினை வழங்கியிருந்தார்.  இந்த நிலையில் நேற்று மாலை நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த 15 சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டது.

இதன் போது பொலிஸார் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,நீதிமன்ற பணியாளர்கள்,மன்னார் நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

DSC_0095
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)