Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக ஹொக்கி லீக்: இங்கிலாந்து-அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

In விளையாட்டு
Updated: 06:41 GMT, Dec 5, 2017 | Published: 06:41 GMT, Dec 5, 2017 |
0 Comments
1156
This post was written by : Anojkiyan

உலக ஹொக்கி லீக் தொடரின், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான லீக் போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளுமே கோல் போட முட்டி மோதிக்கொண்டன.

ஆனால் போட்டி தொடங்கிய 4வது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் அன்செல் லியாம் முதல் கோல் அடித்து இரசிகர்களை பரவசப்படுத்தினார். இதையடுத்து தீவிரமாக விளையாடிய அவுஸ்ரேலிய அணியினர், 33வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து கோல் கணக்கை சமநிலைப்படுத்தியது. இந்த கோலை வொதர்ஸ்பூன் டைலன் அடித்தார்.

இதன்பின்னர் போட்டியின் 41வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கோர்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவுஸ்ரேலிய வீரர் பிளேக் கோவர்ஸ் அந்த கோலை நேர்த்தியாக அடித்து 2-1 என அணியை முன்னிலைபடுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடிய இங்கிலாந்து அணியினர் 54வது நிமிடத்தில் கோல் அடித்து கோல் கணக்கை சமநிலைப்படுத்தியது. இங்கிலாந்தின் பில் ரோபர் இந்த கோலை அடித்தார்.

இதையடுத்து இரு அணியினராலும் கடுமையாக முயற்சித்தும் வெற்றி கோலை அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg