Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் முதலாவது நினைவு தினத்தில் அ.தி.மு.க. உறுதிமொழி!

In இந்தியா
Updated: 07:53 GMT, Dec 5, 2017 | Published: 06:48 GMT, Dec 5, 2017 |
0 Comments
1289
icon_com
This post was written by : Elakkiya
201712050917161390_First-Anniversary-Memorial-Day--AIADMK-pays-tribute-to_SECVPF

“புரட்சித் தலைவி ஜெயலலிதா சூளுரைத்தபடி மக்கள் பணி ஆற்றவும், எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடவும், கழகப்பணி, அரசியல் பணி, பொதுவாழ்வுக்குரிய கடமைகளை ஆற்றுவேன்” என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், தொண்டர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைதி ஊர்வலம் இடம்பெற்றது.

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நிறைவடைந்த அமைதி ஊர்வலத்தின் பின்னர் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் மேற்படி உறுதிமொமி ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)