Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் விஷாலின் சொத்து மதிப்பில் சந்தேகம்!

In இந்தியா
Updated: 07:16 GMT, Dec 5, 2017 | Published: 07:16 GMT, Dec 5, 2017 |
0 Comments
1561
This post was written by : Elakkiya

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நடிகர் விஷாலின் சொத்து மதிப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நடிகர் விஷால் நேற்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்புமனுவில் ஒரு கோடியே 6 லட்சத்து 64 ஆயிரத்து 141 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாக விஷால் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை அசையா சொத்துக்கள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் 7.5 கோடி ரூபாய் அடமான கடன் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அசையா சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள விஷால் எவ்வாறு அடமான கடனை பெற்றுக் கொண்டார் என்பதே தற்போது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. வேட்புமனுவில் விஷால் குறிப்பிட்டுள்ள தகவல்கள் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg