Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ரிச்சி’ திரைப்படமே தனக்கு முதல் திரைப்படம் என்கிறார் ஷ்ரத்தா ஶ்ரீநாத்!

In சினிமா
Published: 07:02 GMT, Dec 5, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Surenth
shraddha srinath

‘ரிச்சி’ திரைப்படமே தான் நடித்த முதல் திரைப்படம் எனவும் இந்தத் திரைப்படம் தான் நடித்திருந்த மூன்று திரைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வெளியாகவுள்ளது எனவும் அந்தத் திரைப்படத்தின் நாயகி ஷ்ரத்தா ஶ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

‘காற்று வெளியிடை’, ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ ஆகிய திரைப்படங்களில் நடித்த அவரின், ‘ரிச்சி’ திரைப்படம் எதிர்வரும் 8ஆம் திகதி வெளிவரவுள்ளது.  இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழில் நான் ‘ரிச்சி’ திரைப்படத்தில்தான் முதலில் நடித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் இந்தத் திரைப்படம் தற்போதுதான் திரைக்கு வருகிறது.

அதையடுத்து நான் நடித்த மூன்று திரைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தைப்போன்று ரௌடியிசம் கலந்த கதையில் இந்த ‘ரிச்சி’ திரைப்படமும் உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நான் ஒரு பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறேன். சில ரௌடிகளை சந்தித்து செவ்வி எடுப்பேன். அப்போது ரௌடியான நிவின் பாலியை சந்திப்பேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

‘விக்ரம் வேதா’ திரைப்படத்தை அடுத்து இந்தத் திரைப்படத்திலும் ரௌடியிசம் கலந்த கதையில் நடித்திருக்கிறேன். அதனால் அந்தத் திரைப்படம் போன்று இந்தத் திரைப்படமும் எனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்” என ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)