Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிஸ்குமார் விவகாரம்: யாழ். உப பொலிஸ் பரிசோதகருக்கு பிடியாணை

In இலங்கை
Published: 07:03 GMT, Dec 5, 2017 |
0 Comments
1576
icon_com
This post was written by : Risha

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உடந்தையாக செயற்பட்டமை தொடர்பான வழக்கில், தலைமறைவாகவுள்ள உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபரும் சம்பவம் இடம்பெற்றவேளை யாழ். பொலிஸ் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ள சிறிகஜனை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்த நீதவான், அவர் தொடர்பான சகல ஆணவங்களையும் அடையாளப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

அதேவேளை, அவர் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினருக்கு அந்த உத்தரவை அனுப்பிவைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இன்றைய விசாரணைகளின்போது, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளின் அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்த, அரச தரப்பு சட்டத்தரணி நிசாந்த, அது தொடர்பான சட்ட மா அதிபரின் விளக்கத்தினையும் மன்றில் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)