Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யவேண்டும்: சேரன்

In சினிமா
Updated: 18:27 GMT, Dec 5, 2017 | Published: 07:47 GMT, Dec 5, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Risha

தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது அதிர்ச்சியளிக்கிறது. திரைப்படங்களுக்கு மானியம் பெறுதல், டிக்கெட் கட்டண நிர்ணயம், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு, கேபிள் டி.வி.யில் படங்கள் ஒளிபரப்புதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தயாரிப்பாளர்கள் சங்கம் அரசை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.

விஷால் தேர்தலில் நிற்பதால் அனைத்து கட்சிகளினதும் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க வேண்டி வரும். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இதனால், தயாரிப்பாளர்களை நம்பி உள்ள 24 சங்கங்களின் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அதுவரை சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடரும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)