Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பைசர் முஸ்தபா

In இலங்கை
Updated: 09:28 GMT, Dec 5, 2017 | Published: 07:22 GMT, Dec 5, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Puvanes

தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அமைச்சின் பக்கத்தில் எந்த தாமதமும் இல்லை என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று(செவ்வாய் கிழமை) இடம்பெற்றற ஊடக சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், “எனக்கு பந்து வீசாமல் விளையாட முடியாது. அதிகாரத்திற்கு உட்பட்டே நாம் செயற்பட்டு வருகின்றோம். தேர்தல் தொடர்பாக அமைச்சர்களிடம் இருந்து முழு ஆதரவும் கிடைக்கவில்லை. சுயாதீனமாக நாம் செயற்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார் எனவே பெப்ரவரி 17ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடைபெறுமா?” என பைசர் முஸ்தபாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

குறித்த கேள்விக்கு பைசர் முஸ்தபா தொடர்ந்தும்  பதில் அளிக்கையில்,

“தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணையகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாட்டின் பிரஜை என்ற வகையிலும், அமைச்சர் என்ற வகையிலும் நான் கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

எமது அமைச்சு தரப்பில் தேர்தல் நடத்துவதற்கு சகல செயற்பாடுகளையும் முழுமையாக செய்து முடித்துவிட்டோம். எமது பக்கத்தில் எந்தவித காலதாமதமும் இல்லை.

தேர்தல் ஆணையாளர் என்ற வகையில் அவர் தனது பணிகளை சரியாகவே செய்துவருகின்றார். இந்த விடயத்தில் அவர் தேர்தலை தாமதப்படுத்துகின்றார் என்றால் அவரிடம் கேள்விகளைக் கேளுங்கள்.

என்மீது குற்றச்சாட்டு இருந்தால் என்னிடம் கேளுங்கள். எனக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)