Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகபூரை என்றும் மறக்க முடியாது: குஷ்பு கவலை

In சினிமா
Updated: 08:12 GMT, Dec 5, 2017 | Published: 08:12 GMT, Dec 5, 2017 |
0 Comments
1291
icon_com
This post was written by : Risha
Kushboo-1

என்னைப் போன்ற இளையவர்களுக்கு பழம்பெரும் நடிகர் சசிகபூர் போன்ற ஒருவருடன் பழகும் வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிதும் அரிது. அவரை என்றும் மறக்க முடியாது என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஹிந்தி நடிகர் சசிகபூர் மரணம் குறித்து அவர் இரங்கல் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த குஷ்பு, ”அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை அவருடன் பழகிய அனைவரும் உணர்ந்திருப்பர். நான் சில படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன்.

என்னைப் போன்ற இளையவர்களுக்கு அவரைப் போன்ற ஒருவருடன் பழகும் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதானது. அவருடைய மரணம் பற்றிய செய்தியை கேள்விப்பட்டதும் எனது இதயம் மிகவும் நொறுங்கி விட்டது.

பல வருடங்களுக்கு முன்பே அவர் திரையுலகிலிருந்து விடைபெற்றிருந்த போதிலும், திரையுலகத்துடனான தொடர்பை விட்டுவிடவில்லை. அனைவருடனும் தொடர்பில் இருந்தார். கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்தேன். சசிகபூரை என்றும் மறக்க முடியாது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)