Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கி வேட்டுகள் முழங்க சசி கபூரின் இறுதி கிரியைகள்

In சினிமா
Updated: 08:38 GMT, Dec 5, 2017 | Published: 08:37 GMT, Dec 5, 2017 |
0 Comments
1343
icon_com
This post was written by : Risha
sasi

துப்பாக்கி வேட்டுகள் முழங்க, பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசி கபூரின் இறுதி கிரியைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் நடைபெற்றது.

சிறுநீரக கோளாறு காரணமாக மும்பையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்தநிலையில், நடிகர் சசி கபூர் நேற்று தனது 79ஆவது வயதில் காலமானார்.

சசிகபூர் மறைவிற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரச தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

பிரபல ஹிந்தி நடிகர் ராஜ்கபூரின் சகோதரரான சசி கபூர், கடந்த 1942ஆம் ஆண்டு தனது 4ஆவது வயதில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து 1970 மற்றும் 1980களில் ஏராளமான படங்களில் நடித்து மிகப் பிரபலமானார். அவர் இதுவரை 116 படங்களில் நடித்துள்ளார்.

சசிகபூருக்கு மத்திய அரசு 2011ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. அதேவேளை, 2015இல் திரை உலகின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)