Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூமியில் மீண்டுமொரு பாரிய ஆபத்தின் அறிகுறி! – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

In அறிவியல்
Updated: 11:45 GMT, Dec 5, 2017 | Published: 08:40 GMT, Dec 5, 2017 |
0 Comments
6945
This post was written by : Puvanes

அண்மைக்காலமாக பூமி பாரிய ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றது என்ற செய்திகள் அதிகரித்துள்ள நிலையில் அந்தாட்டிக்காவில் பாரிய பனிக்கட்டி ஒன்று பிளவடைந்துள்ள விடயம் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவி அதிவேகமாக வெப்பமடைந்து வருகின்றது என்ற விடயம் விஞ்ஞானிகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் அண்மைக்காலமாக துருவப்பகுதியில் பனி உருகலானது வேகமாக அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக அந்தாட்டிக்கா தொடர்பில் அதிகவனத்தினை ஆய்வாளர்கள் எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் அந்தாட்டிக்காவில் சுமார் 267 சதுர அடி கொண்ட பனிப்பாறையானது பிளவடைந்து கடலினுள் வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவமானது புவி வெப்பமடைவதனை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள் இந்த நிலை தொடருமாயில் பூமி மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவதோடு எரிமலை வெடிப்புகளும் கூட அதிகரித்து வருகின்றது. அதேபோல புவியின் சூழற்சி வேகம் குறைவடைந்துள்ளமை காரணமான காலநிலையிலும் பல்வேறு மாற்றங்களை பூமிக்கிரகம் சந்தித்து வருகின்றது.

மறுபக்கம் இவை அனைத்தையும் காரணம் காட்டிவரும் சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள் பூமிக்கிரகம் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகின்றது. இதனால் மனித குலம் மிகப்பெரிய அழிவுகளைச் சந்திக்கப் போகின்றது என அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

earth001

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg