Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இரகசியப் பேச்சு!

In இலங்கை
Updated: 08:49 GMT, Dec 5, 2017 | Published: 08:49 GMT, Dec 5, 2017 |
0 Comments
1249
This post was written by : Ravivarman

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியுடன் இரகசியச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த அணியில் இருந்து மைத்திரி அணிக்கு மாறும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இச்சந்திப்பில் மஹிந்த அணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 5 பேர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இச்சந்திப்பினையடுத்து குறித்த உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இணக்கம் தெரிவித்துள்ளதுடன், விரைவில் இவர்கள் கட்சி மாறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த அணிக்குள் தொகுதிப் பங்கீடுகள் குறித்து ஏற்பட்ட கருத்து மோதல்களின் காரணமாகவே மேற்படி உறுப்பினர்கள் கூட்டு எதிரணியில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg