Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்தத்தினால் உயிரிழந்தால் 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

In இலங்கை
Updated: 08:58 GMT, Dec 5, 2017 | Published: 08:58 GMT, Dec 5, 2017 |
0 Comments
1214
This post was written by : Ravivarman

இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும், அதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இழப்பீடு வழங்கியதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாறு இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த 8 மீனவர்களின் உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டது.

இதேவேளை, அனர்த்தத்திற்கு உள்ளாகி இருக்கும் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உடனடித் தேவைகளுக்காக 10,000 ரூபா முற்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg