Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான நண்டு கட்லெட் செய்வது எப்படி?

In
Published: 09:44 GMT, Dec 5, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Anojkiyan
seafood.crabcakes.DSC_0003 (11).1280

தேவையான பொருட்கள்

பெரியநீளக்கால் நண்டு சதை (அவித்தது) – 5
முட்டை – 2
கடலை மா – கால் கிலோ
சின்னவெங்காயம் (பொடியாக நறுக்கியது) – அரை கிலோ
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது) – 10
ரக்ஸ்தூள் – 100 கிராம்
பூண்டு – ஒன்று
கறுவாப்பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 3
பெருஞ்சீரகம் – 2 தேவையானளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகம், கிராம்பு, கறுவாப்பட்டை ஆகியவற்றை நீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். அதன் பின்பு நண்டு சதையுடன், கடலைமா, வதக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் அரைத்த கலவை, உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பின்னர் சிறிய பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை நன்றாக நுரை வரும்வரை அடித்து வைத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் ரக்ஸ் தூளை நன்றாக சிறிய துண்டுகளாக நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும். இதன்பிறகு அடுப்பில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் உருட்டி தட்டிய கட்லெட்டை முட்டையில் நன்றாக நனைத்து அதன்பிறகு ரக்ஸ் தூளில் பிரட்டி அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான நண்டு கட்லெட் தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)