Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கான பெயர் கசிந்தது!

In சினிமா
Updated: 09:51 GMT, Dec 5, 2017 | Published: 09:09 GMT, Dec 5, 2017 |
0 Comments
1599
icon_com
This post was written by : Risha
201712042219018524_Sivakarthikeyan-next-movie-tittle-leak_SECVPF

இயக்குநர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகிவரும் மூன்றாவது திரைப்படத்தின் பெயர் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

இத்திரைப்பிடத்திற்கு ‘சீமராஜா’ என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய இரு படங்களும் ஹிட் ஆனதால், இப்படமானது பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வருகிறது.

பெயர் இடப்படாமலே, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையிலே தற்போது பெயர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்தில், நெப்போலியன், சூரி, சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இமான் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படத்தின் ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம், தயாரிப்பு ஆர்.டி.ராஜா.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)