Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அற்ப அரசியலுக்காக அவதூறு பேசுபவர்களுக்கு அஞ்சப்போவதில்லை- நஸீர் அஹமட்

In இலங்கை
Updated: 10:44 GMT, Dec 5, 2017 | Published: 10:43 GMT, Dec 5, 2017 |
0 Comments
1971
icon_com
This post was written by : Risha
nazeer-ahamed-Eastern-CM-Sri-Lanka

அற்ப அரசியலுக்காக அவதூறு பேசிக் கொண்டிருப்பவர்களைக் கண்டு தான் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம், தமிழ் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வின் நான்காம் கட்ட நிகழ்வை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”காலாகாலமாக மக்களை ஏமாற்றுகின்ற அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துக் காட்டியபோது இப்பொழுது எதிர்ப்பு தெரிவிக்க வேறு வழியில்லாமல் என் மீது அவதூறு கூறுகின்றார்கள்.

30 மாதம் கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் எனது சொந்த முயற்சியில் மூன்று தொழிற்சாலைகளை ஏறாவூரில் நிறுவ முடிந்திருக்கின்றது. அதனால் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பைப் பெற முடிந்திருக்கின்றது.

எனது அடுத்தகட்ட முயற்சியாக மேலும் 1500 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் பாரிய தொழிற் பேட்டை மிக விரைவில் புன்னைக்குடாவில் அமையும்.

இதனை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஏமாற்று அரசியல்வாதிகள் அழுது புலம்பி மக்களிடம் மீண்டும் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், தங்களது சுய நலனுக்காக மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை மக்கள் புறந்தள்ளுவார்கள் என்பதை காலம் விரைவில் உணர்த்தும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)