Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணை மறுக்கப்பட்ட கற்றலோனியத் தலைவர்களை விடுவிக்கக் கோரிக்கை

In
Updated: 10:03 GMT, Dec 5, 2017 | Published: 10:03 GMT, Dec 5, 2017 |
0 Comments
1164
This post was written by : Suganthini

ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டுள்ள கற்றலோனிய பிரிவினைவாதத் தலைவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

பார்சிலோனாவில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள், கற்றலோனிய பிரிவினைவாதத் தலைவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி வலியுறுத்தியுள்ளனர்.

தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்ட கற்றலோனியாவின் பிரிவினைவாதத் தலைவர்கள் 8 பேர் தொடர்பான வழக்கு விசாரணை, ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, ஒரு இலட்சம் யூரோ பெறுமதியான ரொக்கப்பிணையில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கற்றோலோனியாவின் முன்னாள் உப தலைவர் Oriol Junqueras மற்றும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் Joaquim Forn  ஆகியோருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.  இவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg