Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றியை நோக்கி ஓடுகிறேன்: தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்

In இந்தியா
Updated: 10:18 GMT, Dec 5, 2017 | Published: 10:18 GMT, Dec 5, 2017 |
0 Comments
1212
This post was written by : Elakkiya

வெற்றியை நோக்கி ஓடுவதால் பின்னால் வருபவர்களை திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.

மருதுகணேஷின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஆளும்கட்சி, டி.டி.டி. தினகரன், தீபா என ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பலமுனைப் போட்டி இருக்கின்ற நிலையில் உங்களின் போட்டியாளர் யார் என நிருபர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் மேற்படி பதிலளித்துள்ளார்.

இதன்போது, தமது பலம் மக்களின் நம்பிக்கை என்று குறிப்பிட்ட மருதுகனேஷ் தமக்கு பலவீனம் எதுவும் கிடையாது என்றும் ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புக்களே தனது எதிர்பார்ப்பும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்றால் இரண்டே வருடங்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அதனை தடுப்பதற்கு தமது சட்டத்துறை முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜனநாயகத்தோடு தி.மு.க. வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg