Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் ஆரம்பம்!

In இலங்கை
Published: 10:28 GMT, Dec 5, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Ravivarman
ex

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை 5116 பரீட்சை நிலையங்களில் 688,578 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் நாளை நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவது, எதிர்பார்ப்பு வினாக்கள் அச்சிடுவது, வினாக்கள் தொடர்பில் கலந்துரையாடுவது ஆகிய நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும்,அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வறிவித்தலையும் மீறிச் செயற்படுபவர்கள் குறித்து,

பொலிஸ் தலைமையகம் – 011 242 11 11
பொலிஸ் அவசர அழைப்பு இல. – 119
பரிட்சைகள் திணைக்களம் – 1911
பாடசாலை பரிட்சை ஏற்பாட்டுக் கிளை – 011 278 42 08ஃ 011 278 45 37

எனும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)