Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

In இந்தியா
Updated: 10:36 GMT, Dec 5, 2017 | Published: 10:35 GMT, Dec 5, 2017 |
0 Comments
1419
This post was written by : Elakkiya

தமிழகத்தில் எதிர்வரும் இரு தினங்களுக்கு மழைபெய்யும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்தும் நீடிப்பதால் அடுத்த 12 மணிநேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறம் என்றும் அது வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்பகுதி நோக்கி செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg