Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் சர்வதேச பயங்கரவாதிகள் காலடி வைக்கமுடியாது: சாகல

In இலங்கை
Published: 10:43 GMT, Dec 5, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Ravivarman
ff

இலங்கையில் சர்வதேச பயங்கரவாதிகள் காலடி வைக்கமுடியாது எனவும், இலங்கைக்குள் சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுருவலைத்தடுப்பதற்கு விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சர்வதேச பொலிஸார் (Interpol) இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்திருந்த, சர்வதேச பயங்கரவாதத்தைத் தடுப்பது தொடர்பிலான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் நடவடிக்கைகளை சர்வதேச பொலிஸாரின் தரவுத்தளத்துடன் தொடர்புபடுத்தி இருப்பதால், சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச பயங்கரவாதிகளும் அமைப்புக்களின் உறுப்பினர்களும் இலங்கைக்குள் உட்பிரவேசிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

அவ்வாறு உட்பிரவேசித்தால் உரிய தரப்பினர் ஊடாக உடனடியாக இலங்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)