Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறன்ரோ குடியிருப்பில் தீ: ஒருவர் உயிரிழப்பு

In கனடா
Updated: 10:58 GMT, Dec 5, 2017 | Published: 10:58 GMT, Dec 5, 2017 |
0 Comments
1046
icon_com
This post was written by : Risha
image

ரொறன்ரோவின் லோரன்ஸ் ஹைட்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டமொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாவது மாடியிலேயே தீ பரவியுள்ளது. சம்பவத்தையடுத்து, தீயணைப்பு பிரிவினர் கட்டடத்தை சூழ்ந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

அனர்த்தத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் இத்தீ பரவியுள்ளது. இத்தீ பரவலுக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அனர்த்தத்தை அடுத்து ஏனைய குடியிருப்புகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்கள் இதுவரை குடியிருப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)