Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறைந்த விலை, கூடிய வசதி! – கடந்த வாரத்தின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் விபரம்

In அறிவியல்
Published: 11:02 GMT, Dec 5, 2017 |
0 Comments
1647
icon_com
This post was written by : Puvanes
best001

ஸ்மார்ட்போன்கள் நாளாந்தம் புதிய தொழில்நுட்பத்துடன் வித்தியாசமான வடிவமைப்புடன் சந்தைக்கு வந்தவண்ணமே காணப்படுகின்றன.

ஒவ்வொன்றிலும் ஏதாவது ஓர் புதிய மாற்றங்களை புகுத்தி கணக்கற்ற ஸ்மார்ட்போன்கள் பாவனையாளர்களை ஆக்ரமித்தவண்ணமே காணப்படுகின்றன.

அந்தவகையில் தொழில்நுட்பம் மட்டுமல்லாது குறைவான விலை, பாவனையாளர் ஈர்ப்பு போன்றவற்றோடு கடந்தவாரம் வெளிவந்த சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மைக்ரோமெக்ஸ் வெளியிட்ட பாரத்5 என்ற தொலைபேசி கடந்தவார சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறைந்த விலையில் 16 ஜிபி சேமிப்பு, 5எம்பி கேமரா, 5எம்பி முன் கேமரா போன்றவற்றினையும் கொண்டுள்ளதால் இந்த தொலைபேசி பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

அதேபோன்று, சியோமி வெளியிட்ட 5ஏ ஸ்மார்ட்போனும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 5 அங்குல திரை, 16 மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 13 எம்பி கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பெனசோனிக் வெளியிட்ட எலுகா சி 5.5 அங்குல திரை, 13 எம்பி மற்றும் 8 எம்பி கேமராக்கள், 64 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரெம் என அசத்தல் அம்சங்களுடன் குறைவான விலையில் சந்தைக்கு வந்ததால் இதுவும் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹுவாவியின் ஹொனர் 7 எக்ஸ் மற்றும், எசுஸ் மேக்ஸ் பிளஸ் எம்1 ஆகியனவும் குறைவான விலையில் அசத்தலான பல அம்சங்களுடன் வெளிவந்ததால் கடந்தவார சிறந்த ஸ்மார்ட் தொலைபேசி வரிசையில் இடம்பிடித்துள்ளன.

இவை தவிர ஒப்போ வெளியிட்ட எப் 5 ரெட் எடிஷன் மற்றும் ஜியோனி எஸ்11எஸ் ஆகிய தொலைபேசிகளும் கூட கடந்த வாரம் வெளியான விலை குறைந்த மற்றும் தரம் கூடிய ஸ்மார்ட் போன்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)