Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரசாரக் களத்தில் நடிகர் விஷால்

In இந்தியா
Published: 11:26 GMT, Dec 5, 2017 |
0 Comments
1567
icon_com
This post was written by : Elakkiya

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள  நடிகர் விஷால் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பகுதியில் தனது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில் ஆர்.கே. நகர் மக்களை சந்தித்து வாக்குச் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட விஷால் இன்று காலை தொடக்கம் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டதுடன் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார்.

விஷாலுக்கு அப்பிரதேசத்தில் பாரிய வரவேற்பு  கிடைத்து வருவதாகவும் பெரும்திரளான மக்கள் திரண்டு அவருக்கான ஆதரவை தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தேர்தலில் நடிகர் கமல் களமிறங்குவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் திடீரென நடிகர் விஷால் களத்தில் இறங்கியிருப்பது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறிருப்பினும் விஷால் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தபோதிலும் இதுவரை அவருடைய வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அவருடைய சொத்து மதிப்பில் குழப்பங்கள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)