Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுனாமி தொடர்பான செய்தி தவறானது: அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

In இலங்கை
Updated: 15:53 GMT, Dec 5, 2017 | Published: 11:20 GMT, Dec 5, 2017 |
0 Comments
1303
icon_com
This post was written by : Ravivarman
dmc

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.

பாணந்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பில் பரவி வரும் வதந்தி காரணமாக கடலோர பிரதேசங்களிலுள்ள மக்கள் கடும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

பூமியதிர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி எச்சரிக்கை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவ்வாறான எந்தவித அனர்த்தங்களும் ஏற்படவில்லை எனவும் இது குறித்து எவரும் அச்சப்பட தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அவசர அனர்த்த நிலைமைகளின் போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தி வருவதாகவும் வதந்திகளால் மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)