Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனியாவின் முன்னாள் தலைவருக்கு எதிரான பிடியாணை உத்தரவு வாபஸ்

In
Updated: 03:56 GMT, Dec 6, 2017 | Published: 11:23 GMT, Dec 5, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Suganthini
puuu

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) உட்பட 4 பேரைக் கைதுசெய்வதற்காக பிறக்கப்பட்ட சர்வதேச பிடியாணை உத்தரவை ஸ்பெய்ன் நீதிமன்றம் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி, கற்றலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, இதற்கு ஆதரவாக 90 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இதனையடுத்து, கற்றலோனியாவுக்கான ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடன அறிவிப்பை கார்லெஸ் புகிடமொன்ட் வெளியிட்டார். இதனை ஏற்க விரும்பாத ஸ்பெய்ன் அரசாங்கம், கற்றலோனியாவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அங்கு இம்மாதம் 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தவும் அறிவித்தது. அத்துடன், கற்றலோனியா பிரிவினைவாதத் தலைவர்களையும் பதவியிலிருந்து நீக்கியது.

இதனையடுத்து, கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் உட்பட பிரிவினைவாதத் தலைவர்கள் 4 பேர் பெல்ஜியத்துக்கு தப்பிச்சென்றனர். இதன்போது, இவர்களைக் கைதுசெய்வதற்கான சர்வதேச பிடியாணையை ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றம் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நீதிபதி, ‘கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் உட்பட 4 பேரும் தேசத்துரோகம் மற்றும் கிளர்ச்சி குற்றச்சாட்டை இன்னும் எதிர்நோக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. இருப்பினும், இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறும் தேர்தலையிட்டு, ஸ்பெய்னுக்குத் திரும்ப அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆகையால், இவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட சர்வதேச பிடியாணை உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)