Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 12:24 GMT, Dec 5, 2017 | Published: 12:21 GMT, Dec 5, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Elakkiya
DSC_0011

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்ச்சியாக புறக்கணிப்பதாக தெரிவித்து மாகாணத்தின் வேலையற்ற பட்டாரிகள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘அரசே நியமனம் வழங்கு’, ‘இதுதான் நல்லாட்சியா’, ‘ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த அனைவருக்கும் நியமனம் வழங்கு’, ‘எமது கண்ணீருக்கு பதில் வழங்கு’, ‘ஒரே மாகாணத்தில் வெவ்வேறு வெட்டுப்புள்ளி எதற்கு’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிக்க பல தடவைகள் முயன்ற போதிலும், ஆளுநர் தம்மை புறக்கணித்ததாக கூறும் அவர்கள், கிழக்கு மாகாணசபையில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்வில்  சித்தியடைந்தும் தமக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாமைக்கு காரணம் என்ன என்றும் கேள்வியெழுப்பினர்.

முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா இன்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித கோகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாடசாலைக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். எனினும் ஆளுநர் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

DSC_0002 DSC_0002 (1)DSC_0007 DSC_0011 DSC_0015 DSC_0017 DSC_0020

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)