Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை!

In இலங்கை
Published: 11:44 GMT, Dec 5, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Ravivarman

மன்னார், தாழ்வுபாட்டு கடலில் வைத்துக் கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்துள்ளார்.

மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று மீன் பிடிக்கச் சென்ற வேளையில் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

குறித்த மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டபோதே நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த மீனவர்களை விடுதலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினைப் பயன்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுபாட்டு மீனவர்களில் 5 படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து நேற்று கைது செய்து தாழ்வுபாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதினை அறிந்து கொண்ட தாழ்வுபாட்டு கிராம மக்கள் அனைவரும் தாழ்வுபாட்டு கடற்படை முகாமை நோக்கி சென்று மீனவர்களின் கைது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்ததோடு அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி இருந்தனர்.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் குறித்த மீனவர்களை நேற்று மாலை பொறுப்பேற்றதுடன், மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்ததோடு, இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டனர்.

இதன்படி குறித்த 25 மீனவர்களும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில், மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்தை தம்வசம் வைத்திருக்காததன் காரணத்தினாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எவ்வித நிபந்தனைகளும் இன்றி குறித்த மீனவர்கள் 25 பேரையும் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)