Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விண்வெளிக் குப்பைகளை அகற்ற புதிய திட்டம்!

In அறிவியல்
Updated: 11:38 GMT, Dec 5, 2017 | Published: 11:38 GMT, Dec 5, 2017 |
0 Comments
1179
This post was written by : Puvanes

செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தான வகையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் குப்பைகளை அகற்ற புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரிமுவ் டெப்ரிஸ் எனப்படும் விண்கலத்தின் ஊடாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குப்பைகளை வலைபோட்டு பிடித்து பூமிக்கு கொண்டு வந்து எரிக்கும் வகையில் இந்த விண்கலம் செயற்படவுள்ளது.

பெரும்பாளும் 2018ஆம் ஆண்டுகளின் முதற்பகுதிகளில் குறித்த விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 5 இலட்சம் துண்டுகளுக்கும் அதிகமானவை விண்வெளியில் சுற்றுத்திரிகின்றன. இவை பூமியில் இருந்து அனுப்பப்பட்ட செயற்கைகோள் மற்றும் விண்கலங்களில் இருந்து வெளியானவை.

இவ்வாறான துண்டுகள் பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தவல்லது. ஒரு பெயின்ட் துளி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பாரிய விரிசலைக் கூட ஏற்படுத்தியிருந்தது.

இதன்காரணமாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குப்பைகளை அகற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள. எனினும் ரிமூவ் டெப்ரிஸ் மூலம் இது சாத்தியமா என்பதும் ஒருசில ஆய்வாளர்களிடையே சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg