Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்டேலாவின் இறுதிச்சடங்கு: நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிப்பு

In
Updated: 12:29 GMT, Dec 5, 2017 | Published: 12:18 GMT, Dec 5, 2017 |
0 Comments
1190
This post was written by : Suganthini
nelson

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கின்போது, மில்லியன் கணக்கான டொலர் நிதியை   தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்  அதிகாரிகள் சிலரை   அந்நாட்டு ஊழல் கண்காணிப்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிறவெறிக்கு எதிராக போராடிய நிலையில், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா தனது 95ஆவது வயதில், கடந்த 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி, காலமாகியிருந்தார். இவரது இறுதிச்சடங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், இவரது இறுதிச்சடங்கு இடம்பெற்று சில மாதங்களின் பின்னர், தவறாக நிதி பயன்படுத்தியமை தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஸுமாவிடம், பொது வழக்கறிஞரொருவர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை செய்துவந்த கண்காணிப்புக் குழுவினர், நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கின்போது, மில்லியன் கணக்கான டொலர்களை தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகள் சிலரை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக ஊழல் கண்காணிப்புக் குழுவினர் வெளியிட்டுள்ள 300 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் அதிகாரிகளுக்கு நிதி வழங்கப்பட்ட விடயம், அடிப்படை விதிகள் புறக்கணிக்கப்பட்டமை, செலவீனம் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg