Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு!

In இலங்கை
Updated: 12:28 GMT, Dec 5, 2017 | Published: 12:28 GMT, Dec 5, 2017 |
0 Comments
1278
This post was written by : Ravivarman

மன்னாரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா, ஹேரோயின் போன்ற போதைப்பொருட்கள் விநியோகம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டார்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறப்பாகக் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் பணப்பரிசு மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில், பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0102 DSC_0036 DSC_0029 DSC_0019 DSC_0016

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg