Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு

In இந்தியா
Updated: 16:17 GMT, Dec 5, 2017 | Published: 12:31 GMT, Dec 5, 2017 |
0 Comments
1872
This post was written by : S.K.Guna

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் விண்ணப்பித்த நிலையில் அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.

விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், மற்றும் தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

சுயேட்சைகள் வேட்ப்பாளர்கள் பலரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கும்நிலையில் விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பதாகத் தெரிவித்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தீபாவின் வேட்புமனுவில் பல படிவங்கள் முறையாக நிரப்பப்படவில்லை எனத் தெரிவித்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg