Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் – கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 12:48 GMT, Dec 5, 2017 | Published: 12:48 GMT, Dec 5, 2017 |
0 Comments
1172
This post was written by : Elakkiya

அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பது எவ்வாறு என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் அனர்த்தம் ஒன்று ஏற்படுகையில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் முன்னேற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், அனர்த்த முன் ஏற்பாடுகள் தொடர்பில் இன்றைய விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று முதல் மாவட்ட செயலகத்தில் 24 மணி நேரமும் இடர் முகாமைத்துவ நிலையம் செயற்படும் என்றும்மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடலில், பிரதேச செயலாளர்கள், இடர் முகாமைத்துவ அதிகாரிகள், முப்படையினர், பொலிசார், திணைக்கள சார் அதிகாரிகள், தொண்டு நிறுவன பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg