Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவில் அனர்த்த நிலமை தொடர்பான கலந்துரையாடல்!

In இலங்கை
Published: 14:24 GMT, Dec 5, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Ravivarman
IMG_3762

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,

“இலங்கையில்அடுத்து வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வானிலை அவதானிப்பு நிலையத்தினால் எதிர்வு கூறப்பட்டதற்கு அமைய அரசினால் அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளாரினால் மாவட்டத்தில் உள்ள முப்படைகளின் பிரதானிகள், பிரதேச செயலாளர்கள், அரச உயர்அதிகாரிகள், நீர்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் பங்கு பற்றலுடன் இன்று அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வங்கக்கடலில் தற்போது 1100 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ள தாளமுக்கத்தினால் ஏதாவது பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏற்படுமாயின் அவற்றுக்கான முன்னாயத்த மற்றும் அவசர நடவடிக்கைகள் நிவாரண சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் சூறாவளியானது முல்லைத்தீவு மாவட்டத்தை ஊடறுத்து செல்லுமாயின் ஏற்படும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்களை எவ்வாறு குறைத்துக்கொள்வது விசேடமாக கடற்தொழிலாளர்கள் மற்றும் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மீட்ப்புப்படையணினைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது” என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)