Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் இயற்கை அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாடல்!

In இலங்கை
Published: 15:14 GMT, Dec 5, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Ravivarman

அனர்த்தம் தொடர்பில் வடகிழக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், அவசர நிலமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக யாழ்மாவட்டத்திலுள்ள தீவக வலயங்கள் மற்றும் கடலோரப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகள் இங்கு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். இதன்போது சூறாவளி அல்லது வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம்கொடுக்க முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள பாதுகாப்புத்தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மீனவர்களை மறு அறிவித்தல்வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை சகல மீனவர்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபர் கடற்தொழில் நீரியல்வள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

மேலும், உலர் உணவு ,மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, ஆகிய சகல துறைசார்ந்த அதிகாரிகளையும் எந்த நேரமும் விளிப்பாக இருக்குமாறும் பாடாசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தெய்வேந்திரம் மற்றும் முப்படையினர், பிரதேச செயலாளர்கள், துறை சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)