Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘விமானம்’ படத்தின் டீசரை வாழ்த்திய தனுஷ்!

In சினிமா
Published: 16:49 GMT, Dec 5, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Ravivarman
Danush

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘விமானம்’ படத்தின் டீசருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘விமானம்’ படம், எதிர்வரும் கிறிஸ்துமஸ் தின வெளியீடாக வர இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன் கேரளாவில் மாற்றுத்திறனாளியான ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படமாக இது உருவாகியுள்ளது.

இந்தப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் என்ற எண்ணிக்கையை இந்த டீசர் எட்டியுள்ளது.

இந்நிலையிலேயே இந்தப்படத்தின் டீசரை பார்த்து நடிகர் தனுஷ், பிருத்விராஜூக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)