Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நிதி எங்கே?: சிவஞானம் கேள்வி!

In இலங்கை
Published: 17:12 GMT, Dec 5, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Ravivarman
_98887861_c.v.k.sivaganam

வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோள்வியெழுப்பியுள்ளார்.

வட.மாகாணசபையின் 111வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. மேற்படி விடயம் தொடர்பாக சபைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவைத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து 144 மில்லியன் ரூபாய் நிதி எடுக்கப்பட்டது. அந்த நிதியை சில வகைப்பாட்டினருக்கே வழங்கப்படவேண்டும் என மாகாணசபை நிபந்தனை விதித்திருந்தது.

அத்துடன் அவர்களுக்கு கொடுப்பதற்கு சபை அங்கீகாரம் வழங்கவேண்டும் எனவும் கூறியிருந்தது. இதற்கமையவே கூட்டுறவு திணைக்களத்திற்கும் 32 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட நிதி செலவிடப்பட்டுள்ளதா? செலவிடப்பட்டிருந்தால் மாகாணசபையின் அனுமதி பெறப்பட்டதா? செலவிடப்படவில்லை என்றால் அது தொடர்பான தகவல்களை அடுத்த அமர்வில் மாகாண கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையேல் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கூட்டுறவு திணைக்களத்திற்கான ஒதுக்கீட்டை ஆதரிக்கமாட்டோம்” என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)