Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளணித் தெரிவில் இழுபறி: கூட்டத்திலிருந்து ரெலோ மற்றும் புளொட் வெளியேறின!

In இலங்கை
Published: 18:14 GMT, Dec 5, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Ravivarman
as

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள் அதிருப்தியுடன் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற மேற்படிக் கூட்டத்திலிருந்தே குறித்த கட்சிகள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில், வட.கிழக்கு மாகாண ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஆளணிகள் அமைப்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன. அத்துடன், ஆளணிகள் தொடர்பில் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரினால் திருப்தியாக பதில்கள் அளிக்கப்படாத காரணத்தினால், தாம் அதிதிருப்பதியுடன் கூட்டத்திலிருந்து வெளியேறிச் செல்வதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நா.ஸ்ரீகாந்தா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.

எனினும் இது குறித்து கலந்துரையாடலின் இறுதியில் தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் வித்தியாசமான கள நிலமைகளை உருவாக்கியுள்ளது.

இந்த அடிப்படையில், ஒவ்வொரு வட்டாரத்தின் இயல்புகளைக் கருத்திற் கொண்டு வேட்பாளர்களைத் தெரிவு செய்வது என்பது தொடர்பாக பரிசீலணை செய்யப்பட்டது.

அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடி அந்தந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ளவர்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றவகையில் களம் அமைக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றித்து பிரச்சாரங்களை செய்து தேர்தலை வெற்றி கொள்வது எவ்வாறு என்று ஆராயப்பட்டது.

அத்துடன், நாளை புதன்கிழமையும் (06.12) நாளைமறுதினம் வியாழக்கிழமையும் (07.12) தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்கப்பாட்டின் இறுதி முடிவினை பொது மக்களுக்கு அறிவிப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)