Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டா மீது நடவடிக்கை எடுக்க மீண்டும் இடைக்கால தடை! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 06:22 GMT, Dec 6, 2017 | Published: 03:17 GMT, Dec 6, 2017 |
0 Comments
1181
This post was written by : Varshini

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் இடைக்கால தடை விதித்துள்ளது.

கோட்டா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, இன்று (புதன்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 15ஆம் திகதிவரை இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால தடையுத்தரவு நிறைவு: கோட்டாவின் மனு விசாரணைக்கு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு, இன்று (புதன்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில், கோட்டாவின் பெற்றோருக்கு நினைவுத்தூபி அமைப்பதற்கு பெருந்தொகை அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக புலனாய்வுத்துறையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதன் பிரகாரம் கோட்டா கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்ட நிலையில், தமது கைதினை தடுக்கும் வகையில் கோட்டா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவின் பிரகாரம் கோட்டா மீதான நடவடிக்கைக்கு நீதிமன்றம் இன்றுவரை இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், இன்றைய தினம் குறித்த மனு மீள விசாரிக்கப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg