Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான் அணி!

In கிாிக்கட்
Updated: 03:54 GMT, Dec 6, 2017 | Published: 03:54 GMT, Dec 6, 2017 |
0 Comments
1399
This post was written by : Anojkiyan

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 138 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ஓட்டங்களை பெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக நஸிர் ஜாமல் 53 ஓட்டங்களையும், ரஹாமட் சஹா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் போய்ட் ரேங்கின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைதொடர்ந்து 239 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 31.4 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 138 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் முஜீப் சத்ரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முஜீப் சத்ரன் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg