Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படகுகளுக்கு ஏற்படும் நிலையே மீனவர்களுக்கும் ஏற்படும்: மீன்பிடி அமைச்சர்

In இலங்கை
Updated: 06:01 GMT, Dec 6, 2017 | Published: 03:39 GMT, Dec 6, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Varshini
mahinda

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள், இனிமேல் தண்டப்படணம் செலுத்தினால் மாத்திரமே விடுதலை செய்யப்படுவார்கள் என கடற்றொழில் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லாவிட்டால், இந்திய படகுகளுக்கு ஏற்படும் நிலையே மீனவர்களுக்கும் ஏற்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க உச்சகட்ட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கை குறித்து இந்திய மத்திய அரசுடன் ஏற்கனவே பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது, அவர்களே இது பிழையான நடவடிக்கை என ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், தொடர்ந்தும் இடம்பெறும் அத்துமீறல் நடவடிக்கைகளால் இலங்கை மீனவர்களின் கடற்றொழில் பாதிக்கப்படுவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வடக்கில் நந்திக்கடல் உள்ளிட்ட 10 களப்புகளை அபிவிருத்தி செய்யவுள்ளதோடு, அதன்மூலம் அதிக மீன் அறுவடையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)