Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை மாற்றுவதற்கு ட்ரம்ப் தீர்மானம்!

In
Published: 03:56 GMT, Dec 6, 2017 |
0 Comments
1344
icon_com
This post was written by : Suganthini

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ரெல் அவிவ்விலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் உடனடியாக எடுக்கமாட்டாரெனவும், அவ்வதிகாரி கூறியுள்ளார்.

இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனர்களுக்கு புனித இடமாக ஜெருசலேம் காணப்பட்டு வருகின்றது. தமது நாட்டின் தலைநகரமென்று இஸ்ரேல் கூறிவரும் அதேவேளை, எதிர்காலத்தில் கிழக்கு  ஜெருசலேம்  பலஸ்தீனத்தின் தலைநகராக விளங்குமென பலஸ்தீனம் கூறிவருகின்றது. இந்நிலையில், ஜெருசலேம் விவகாரம்  சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே,  இஸ்ரேலின் தலைநகரமாக  ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிக்கவுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (3ஆம் திகதி) செய்தி வெளியாகியது.   அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு  ஜோர்டான், துருக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)