Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆகாஷ் ஏவுகணை இந்திய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது!

In இந்தியா
Updated: 04:01 GMT, Dec 6, 2017 | Published: 04:01 GMT, Dec 6, 2017 |
0 Comments
1134
This post was written by : Puvanes

முற்றுமுழுதான இந்திய தயாரிப்பான ஆகாஷ் சுப்பர் சொனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா – பலசோர் பகுதியில் உள்ள சோதனைத் தளத்தில் நேற்று குறித்த ஏவுகளை ஆளில்லாத சிறிய விமானம் ஒன்றின் மீது ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் வெற்றிபெற்றதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்திலும் ஆகாஷ் ஏவுகணை இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை 25 கிலோமீற்றர் தூரத்தினைத் தாண்டிச்சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை தாக்கி அழிக்கக்கூடியது மட்டுமல்லாது ஒரே நேரத்தில் பல திசைகளிலும் சுழன்று பயணிக்கும் திறன் கொண்டது.

போர் விமானங்கள், ஏவுகணைகணைகள் போன்றவற்றினை தாக்கி அழிக்கவல்ல இந்த ஏவுகணை சுமார் 55 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களையும் சுமந்து செல்லக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிவேகமாக பயணிக்கக்கூடிய ஆகாஷ் ஏவுகணையானது நவீன தாக்குதல் முறைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், இந்திய இராணுவத்திற்கு வலு சேர்க்கும் நவீன ஆயுதமாகவும் கருதப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg