Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பின் பிளவு தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல!

In இலங்கை
Published: 04:12 GMT, Dec 6, 2017 |
0 Comments
1803
icon_com
This post was written by : Varshini
TNA

 தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பங்காளிக் கட்சிகள் வெளியேறுவது – வெளியேற அனுமதிப்பது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானது அல்ல என புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி சபை பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடின்மை காரணமாக ரெலோவும் வெளியேறியுள்ள நிலையிலேயே புத்திஜீவிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஈ.பி.ஆர்.எல்.எப். வெளியேறியுள்ள நிலையில் தற்போது ரெலோவும் வெளியேறியுள்ளமை தேசிய அரசியலில் தாக்கத்தை செலுத்துமென வலியுறுத்தியுள்ள புத்திஜீவிகள், அரசியல் தீர்விற்காக இந்தச் சந்தர்ப்பத்தையும் தமிழர் தரப்பு நழுவ விடுகின்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே ஒரு சமூகத்தின் நலன் சார்ந்து அனைத்துக் கட்சிகளும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள புத்திஜீவிகள், இந்த ஒற்றுமையை தொடர்ந்தும் பேணுவதற்காக தமிழரசுக் கட்சியும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு, ஏனையவர்களை அரவணைத்துச் செல்வதன் மூலமாக தங்களுடைய அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை கட்சிகள் தனித்து நின்று தங்களுடைய சுய பலத்தை பரீட்சிப்பதற்கான களமாக உள்ளூராட்சி சபை தேர்தலை பயன்படுத்த விரும்பினால், அந்த முடிவு தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் நாடாளுமன்றில் தொடர்ந்தும் கூட்டமைப்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடைய தலைமையில் தொடர வேண்டும் என புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)