Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இலங்கை அணி திணறல்

In கிாிக்கட்
Published: 04:31 GMT, Dec 5, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Anojkiyan

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

410 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்ட நிறைவில், 3 விக்கெட்டுக்களை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, விராட் கோஹ்லியின் இரட்டைச் சதம், முரளி விஜயின் சதத்தின் துணையுடன் 7 விக்கெட்டுக்களை இழந்து, 536 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட போது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

பின்னர் தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, அனுபவ வீரர்களான சந்திமால், மத்தியூசின் சதத்தின் துணையுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 163 ஓட்டங்களினால் முன்னிலைப் பெற்றிருந்த இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்சிற்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, துடுப்பாட்டத்தை நிறைவு செய்தது.

இதன்படி இந்திய அணி 409 ஓட்டங்களினால் முன்னிலைப் பெற, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 410 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

இந்த வெற்றி இலக்கிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்ட நிறைவின்போது, 3 விக்கெட்டுக்களை இழந்து 31ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

நாளைய (புதன்கிழமை) இறுதிநாள் ஆட்டத்தில், இலங்கை அணி வெற்றிக்காக 7 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க, இன்னும் 379 ஒட்டங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)