Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Published: 04:39 GMT, Dec 6, 2017 |
0 Comments
1063
icon_com
This post was written by : Puvanes
high001

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அவசியமான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றில் ஓஹி புயல் பாதிப்பு தொடர்பாக தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் ஓஹி புயலினால் காணமாமல்போன மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும், அது மட்டுமின்றி இந்த விடயம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மீனவர்களை கண்டுபிடிக்க பொலிஸ்படையும், கடற்படையும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் அரசுகளை குறைக்கூறக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள் நிவாரணப்பணிகளை அரசுகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)