Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷமியும் நடிப்பா? இலங்கை இரசிகர்கள் சரமாரி கேள்வி

In கிாிக்கட்
Updated: 07:28 GMT, Dec 6, 2017 | Published: 05:16 GMT, Dec 6, 2017 |
0 Comments
1477
icon_com
This post was written by : Anojkiyan
shami-759

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் டெல்லி மைதானத்தில், காற்று மாசை காரணம் காட்டி இலங்கை வீரர்கள் நேரத்தை வீணடித்ததாக இந்திய ஊடகங்கள் காரசாரமாக விவாதித்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமியும் மைதானத்தில் வாந்தி எடுத்தமை அவர்களின் விவாதத்தை தலைகீழாக மாற்றியுள்ளது.

இரண்டாம் மற்றும் நான்காம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை வீரர்களான சுரங்க லக்மால், கமகே ஆகியோர் மைதானத்தில் வாந்தி எடுத்து, பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தனர். இதனால் போட்டி சில நிமிடங்கள் தடைப்பட்டது.

இதனைதொடர்ந்து இலங்கை வீரர்கள் முககவசம் அணிந்து விளையாடியிருந்த போதும், இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், இலங்கை வீரர்கள் நேரத்தை வீணடித்ததற்கு சர்வதேச கிரிக்கெட் சபை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்திய வீரர் ஒருவரே இவ்வாறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களை சாடிவந்த இந்திய ஊடகங்களும், இந்திய வீரர்களும் மௌனம் சாதித்துவருகின்றனர். பதிலுக்கு இலங்கை இரசிகர்கள், மொஹமட் ஷமியும் நேரத்தை வீணடிக்க நடித்தாரா? என சமூகவலைதளங்களில் கேலியாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)