Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லிக்கு ஐ.நா விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

In இந்தியா
Updated: 07:07 GMT, Dec 6, 2017 | Published: 05:26 GMT, Dec 6, 2017 |
0 Comments
1791
This post was written by : Puvanes

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமான குழந்தைகளின் மூளை பாதிப்படையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தவிடயம் தொடர்பாக ஐ.நா மேற்கொண்ட ஆய்வறிக்கையின் மூலமாகவே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுமிக்க பகுதிகளில் குழந்தைகள் வசிப்பது தெற்கு ஆசியாவிலேயே அதிகமாக காணப்படுகின்றது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு தற்போது அபாய அளவையும் தாண்டிவிட்டதாகவும், இதன்காரணமாக எதிர்காலசந்ததியினர் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நச்சுக்காற்றினைச் சுவாசிப்பதன் காரணமாக குழந்தைகளில் நுரையீரல் மட்டுமல்லாது அவர்களது மூளை வளர்ச்சியும் பாதிப்படைந்து எதிர்காலத்தை சிதைத்துவிடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகளை காற்று அதிகமாக மாசுபட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும், முகமூடிகளைப் பாவிக்கவேண்டும் என்பதோடு, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தினை அதிகரித்து நோய்ப்பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காக்கவேண்டும் எனவும் ஐ.நாவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, டெல்லியில் காற்று மாசடையும் அளவு அதிகரித்துவிட்டது இதனால், ஹெலிகெப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஸ்வந்தர் குமார் அண்மையில் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg