Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லெபனான் பிரதமர் ஹரிரியின் ராஜினாமா வாபஸ்

In உலகம்
Published: 05:27 GMT, Dec 6, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Suganthini

லெபனான் பிரதமர் ஸாட் அல் ஹரிரி, தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோதே, தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக, அவர் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில்  லெபனான் பிரதமர் ஹரிரி தங்கியிருந்தபோது, தொலைக்காட்சிச் சேவையொன்றில் திடீரெனத் தோன்றி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதன் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்வதாகவும் கடந்த நொவம்பர் மாதம் 4ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இருப்பினும், இவரது ராஜினாமாவை ஏற்க விரும்பாத லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன், பிரதமர் ஹரிரியை உடனடியாக நாடு திரும்புமாறு வலியுறுத்தியிருந்தார். அப்போது, லெபனானின் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் தான் நாடு திரும்புவதாகக் கூறியிருந்த பிரதமர் ஹரிரி, லெபானுக்குத் திரும்பியிருந்தார். இதனையடுத்து, ஜனாதிபதி அவுனையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடிவந்த நிலையில், இவரது ராஜினாமா வாபஸ் பெறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)