Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய அணியின் வேகத்துக்கு அடிபணிந்தது இங்கிலாந்து: 2வது டெஸ்டிலும் தோல்வி

In கிாிக்கட்
Published: 05:40 GMT, Dec 6, 2017 |
0 Comments
1284
icon_com
This post was written by : Anojkiyan

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்ரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கடந்த 2ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்து.

அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி முதலாவது இன்னிங்ஸிற்காக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 442 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஷோன் மார்ஷ் ஆட்டமிழக்காது 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கிரைஜ் ஓவர்டொன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து தமது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 227 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக கிரைஜ் ஓவர்டொன் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் நாதன் லியோன் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

215 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலிய அணி, 138 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 354 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக உஸ்மான் கவாஜா மற்றும் மிட்செல் ஸ்டாக் ஆகியோர் தலா 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டசன் 5 விக்கெட்டுகளையும் கிறஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

10 விக்கெட்டுகள், இரண்டு நாள் வசம் இருந்தும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்து அணி, 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்ச ஓட்டமாக ஜோ ரூட் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டாக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)